search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கார்கே நிதிஷ் குமாரிடம் பேச முயல்கிறார், நிதிஷ் குமார் பிஸியாக இருக்கிறார் - ஜெய்ராம் ரமேஷ்
    X

    "கார்கே நிதிஷ் குமாரிடம் பேச முயல்கிறார், நிதிஷ் குமார் பிஸியாக இருக்கிறார்" - ஜெய்ராம் ரமேஷ்

    • இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார்.
    • இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார். அவருடன் மல்லிகார்ஜூன கார்கே பலமுறை பேச முயன்றார். ஆனால் இருவரும் பிஸியாக இருப்பதால், பேசுவதற்கு சூழ்நிலை அமையவில்லை. மல்லிகார்ஜூன கார்கே நிதிஷ் குமாரை பேச அழைக்கும் போது அவர் பிஸியாக இருக்கிறார். நிதிஷ் குமார் பேச அழைக்கும் போது கார்கே பிஸியாக இருக்கிறார்" எனக் கூறினார்.

    மேலும், இந்தியா கூட்டணியின் முதல் இரண்டு கூட்டத்தையும் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்ததாக தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும், அதை நோக்கி உழைக்க காங்கிரஸ் உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, "அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

    Next Story
    ×