search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வழக்கமான தீர்ப்பாக பார்க்கவில்லை: கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் குறித்து அமித் ஷா கருத்து
    X

    வழக்கமான தீர்ப்பாக பார்க்கவில்லை: கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் குறித்து அமித் ஷா கருத்து

    • அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக நான் நம்புகிறேன்.
    • ஒருவர் வெற்றி பெற்றால், அவர் குற்றவாளியாக இருந்தாலும் உச்சநீதிமன்றம் அவரை ஜெயிலுக்கு அனுப்பாது என சொல்ல முயற்சிக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் குறித்தும், அவரது கட்சிக்கு ஆதவாக போதுமான வாக்குகள் விழுந்தால் மீண்டும் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்காது எனக் கூறியிருக்கிறாரே? அதைப் பற்றியும் தங்களது கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அமித் ஷா அளித்த பதில் பின்வருமாறு:-

    அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாக நான் நம்புகிறேன். ஒருவர் வெற்றி பெற்றால், அவர் குற்றவாளியாக இருந்தாலும் உச்சநீதிமன்றம் அவரை ஜெயிலுக்கு அனுப்பாது என சொல்ல முயற்சிக்கிறார். அவருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள் தங்கள் தீர்ப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது அல்லது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.

    சட்டத்தை விளக்குகின்ற உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. இது ஒரு சாதாரண அல்லது வழக்கமான தீர்ப்பு அல்ல என நான் நம்புகிறேன். சிறப்பு கவனிப்பு வழங்கப்பட்டுள்ளது என நாட்டின் பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது.

    திகார் சிறையில் கேமரா அமைக்கப்பட்டு, அது பிரதமர் மோடி ஆலவலகத்திற்கு காண்பிக்கப்படுகிறது என்ற கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கெஜ்ரிவால் கட்சி 22 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. ஒட்டுமொத்த நாட்டின் மின்சார கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவாதம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 22 இடங்களில் மட்டுமே போட்டியிடும்போது, எப்படி ஆட்சியமைக்க முடியும்.

    உச்சநீதிமன்றத்தில் அவரது கைது முறைகேடு என வழக்கு தொடர்ந்துள்ளார். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் ஜாமின் கேட்டார். நீதிமன்றம் ஜாமினும் வழங்கவில்லை. இரண்டையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அதன்பின் தேர்தல் பிரசாரத்திற்காக அனுமதி கேட்டார். நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஜூன் 2-ந்தேதி அவர் மீண்டும் திகார் ஜெயல் செல்ல வேண்டும். இது எப்படி அவருக்கு சாதகமாகும்.

    இவ்வாடி அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×