search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா கூட்டணிக்கு 315 இடங்கள் கிடைக்கும்- மம்தா பானர்ஜி நம்பிக்கை
    X

    இந்தியா கூட்டணிக்கு 315 இடங்கள் கிடைக்கும்- மம்தா பானர்ஜி நம்பிக்கை

    • பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும்.
    • நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர்.

    கல்யாணி:

    மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம், கல்யாணி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    சந்தேஷ்காளி விவகாரத்தில் பா.ஜ.க.வினரும் பிரதமரும் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். உத்தரவாத மன்னர் (மோடி) மேற்கு வங்காளத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்.

    தற்போது பல்வேறு வீடியோக்கள் வெளியாகி உண்மை வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில் அந்தக் காட்சிகளைக் காட்ட வேண்டாம் என்று பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி சேனல்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். பா.ஜ.க. அதிகபட்சமாக 200 இடங்களில் வெற்றி என்ற அளவுடன் கட்டுப்படுத்தப்படும். இந்த பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சிக்கு வர மாட்டார் என்பதே எங்களின் ஒரே உத்தரவாதமாகும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்த விட மாட்டோம்.

    நமது மத வழக்கங்களாகட்டும் அல்லது உணவுப் பழக்கவழக்கங்களாகட்டும். அனைத்திலும் பா.ஜ.க.வினர் தலையிடுகின்றனர். இதை ஏற்க முடியாது. இது நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×