அயோத்தி வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு: எடை எத்தனை கிலோ தெரியுமா?

அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன.6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது.
அயோத்தி வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பூட்டு: எடை எத்தனை கிலோ தெரியுமா?
Published on

லக்னோ:

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாட்கள் பூஜையானது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்கள், நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன. இந்த பூட்டு இந்து மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 6 மாத காலமாக தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது. இது உலகின் மிக பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்த பூட்டை உருவாக்கிய அலிகாரை சேர்ந்த கைவினைக் கலைஞர் சத்யா பிரகாஷ் ஷர்மா சமீபத்தில் காலமானார். அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்த பூட்டை பரிசாக வழங்கவேண்டும் என்பதே அவரது கடைசி ஆசை என அவரது மனைவி ருக்மணி ஷர்மா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com