search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யாத்திரைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: மம்தாவுக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்
    X

    யாத்திரைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: மம்தாவுக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்

    • அஸ்ஸாமில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, பல தடைகளும், பிரச்னைகளும் உருவானது.
    • ஜாதி மத பிரிவினைகளை தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோள்.

    இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் என்ற பெயரில் மணிப்பூரில் இரண்டாவது யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி, தற்போது மேற்குவங்கத்தை அடைந்துள்ளார். அஸ்ஸாமில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்ட போது, பல தடைகளும், பிரச்னைகளும் உருவானது. அதனைத்தொடர்ந்து

    மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள இந்த நடைப்பயணத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்க வேண்டி முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்றே எழுதியுள்ளார்.

    அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "அஸ்ஸாம் மாநில நடைப்பயணத்தின் போது பல பிரச்னைகளை சந்தித்த நிலையில், சில தவறான ஆட்களால் நடைப்பயணத்தில் தீங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நடைப்பயணம் பாதுகாப்பான முறையில் நடப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறேன்" என கூறியிருந்தார்.

    பாஜக உருவாக்கியுள்ள ஜாதி மத பிரிவினைகளை தளர்த்தி மக்களை ஒன்றாக்குவதே இந்த நடைப்பயணத்தின் குறிக்கோள் என குறிப்பிட்ட, கார்கே நாட்டில் பலவீனமாக இருப்பவர்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதிகளை பெற்று தருவதே இதன் நோக்கம் என்றும் இந்த அரசியலற்ற முயற்சி பலகோடி இந்திய மக்களை ஈர்த்துள்ளது எனவும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

    Next Story
    ×