search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல் மந்திரி என்பவர் சட்டத்தைவிட மேலானவர் அல்ல: அமலாக்கத்துறை வாதம்
    X

    முதல் மந்திரி என்பவர் சட்டத்தைவிட மேலானவர் அல்ல: அமலாக்கத்துறை வாதம்

    • அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவால் ஆஜரானார்.
    • டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி கைதுசெய்தனர். தொடர்ந்து 22-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத் துறையினர் ஆஜர்படுத்தினர்.

    இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலை 28-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே, கெஜ்ரிவாலின் காவல் இன்றுடன் முடிந்தநிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.

    கோர்ட்டில் ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், இது ஒரு அரசியல் சூழ்ச்சி. இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார்.

    இந்நிலையில், கெஜ்ரிவாலிடம் மேலும் விசாரணை நடத்த ஒரு வார காலம் அவகாசம் கேட்டது அமலாக்கத்துறை. அப்போது சட்டத்தைஅ விட முதல் மந்திரி மேலானவர் இல்லை என வாதமிட்டது. இதையடுத்து தீர்ப்பை தள்ளிவைத்தார் நீதிபதி.

    Next Story
    ×