search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மியை அமலாக்கத்துறை அழிக்க பார்க்கிறது - ஐகோர்ட்டில் பரபரப்பான விவாதம்
    X

    'ஆம் ஆத்மியை அமலாக்கத்துறை அழிக்க பார்க்கிறது' - ஐகோர்ட்டில் பரபரப்பான விவாதம்

    • கடந்த 21-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
    • வெறுமென 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்

    கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்று புகார் எழுந்தது.

    இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒரே ஒரு சம்மனுக்கு கூட பதிலளிக்கவில்லை. .

    இதனையடுத்து, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் டெல்லி இகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது. இதனையடுத்து கடந்த 21-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின் அவருக்கு 7 நாள் நிதிதிமன்ற காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தினர்.

    அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கெஜ்ரிவால். அப்போது, இதுவரை எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை. இருப்பினும் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்.

    ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே அமலாக்கத்துறை என்னை கைது செய்திருக்கிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் பாடம் புகட்டுவார்கள். மதுபான கொள்கை வழக்கில் என்னை வேண்டுமென்ற அமலாக்கத்துறை சிக்க வைத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

    செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அந்த வழக்கின் விசாரணையில்,

    அமலாக்கத்துறை: "கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்ட்களை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும். அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதற்கு எங்களிடம் வலுவான ஆதாரம் உள்ளது. கோவா தேர்தலில் ஆம் ஆத்மி லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது" என வாதிடப்பட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவால்: "ரூ.100 கோடி ஊழல் நடந்திருந்தால், அந்த ஊழலின் பணம் எங்கே போனது? உண்மையில், ED விசாரணைக்குப் பிறகுதான் இந்த ஊழல் தொடங்கியது. அமலாக்கத்துறைக்கு இரண்டு நோக்கங்கள் மட்டும் தான் உள்ளது. ஒன்று ஆம் ஆத்மி கட்சியை அழிக்க வேண்டும். மற்றொன்று மறைமுகமாக சிலரை மிரட்டி பணம் வசூலிக்க வேண்டும்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சரத் ரெட்டி என்பவர் பாஜகவுக்கு ரூ.55 கோடி நிதி அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஏன் பாஜகவுக்கு நன்கொடை வழங்கவேண்டும்?

    இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று அறிவிக்கவில்லை. என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டேன்.

    மணிஷ் சிசோடியாவின் செயலாளராக இருந்த அரவிந்த், சிசோடியா சில கோப்புகளை என் முன்னிலையில் கொடுத்ததாக கூறினார். பல அமைச்சர்கள் எனது வீட்டிற்கு வந்து ஆவணங்களைத் தருகிறார்கள். பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய இது மட்டும் போதுமா?"

    வெறுமென 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். இது போல், நானும் இந்த ஊழலில் மோடியும், அமித் ஷாவும் தொடர்பில் இருக்கிறார்கள் என்றால், அவர்களும் கைது செய்யப்படுவார்களா? என அவர் கேள்வியெழுப்பினார்

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறுதியாக, கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்களுக்கு காவல் நீட்டித்து உத்தரவிட்டது.

    Next Story
    ×