search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ்- ஆம்ஆத்மி இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
    X

    காங்கிரஸ்- ஆம்ஆத்மி இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது- விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

    • டெல்லியில் ஒரு இடம்தான் காங்கிரஸ்க்கு வழங்க முடியும் என்றது ஆம் ஆத்மி.
    • தற்போது 4-3 என்ற அளவில் இடங்களை பிரித்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்.

    மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளில் உள்ளன. இதில் 15 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ்க்கு கொடுக்க முடியும். இதை ஏற்றுக் கொண்டால் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்வேன் என அகிலேஷ் யாதவ் நிபந்தனை விதித்தார்.

    இறுதியாக 17 இடங்களை காங்கிரஸ்க்கு ஒதுக்க முன்வந்தார். இது தொடர்பாக காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தற்போது ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளன. ஆனால், பா.ஜனதாவை வீழ்த்தி டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்தன.

    ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலவிவந்தது. காங்கிரஸ்க்கு ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் ஆம் ஆத்மி பிடிவாதமாக இருந்தது.

    சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் தலையிட்டதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி உதவியுடன் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் டெல்லி குறித்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    இரு கட்சிகளும் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவு இந்தியா கூட்டணிக்கான வெற்றி என அறிவித்துள்ளன. இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அது சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று மாலைக்குள் இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியானால், இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தடையை தாண்டியதாக கருதப்படும்.

    Next Story
    ×