search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்-  வாக்காளர்களுக்கு அமித்ஷா வலியுறுத்தல்
    X

    மத்திய மந்திரி அமித்ஷா (கோப்பு படம்)

    ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்- வாக்காளர்களுக்கு அமித்ஷா வலியுறுத்தல்

    • இந்த 2 கட்சிகளும் ஊழல் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன.
    • இந்த முறை பாஜகவை முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    மண்டியா:

    கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தற்போது அங்கு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு முன்னதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்றே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    கர்நாடகா மாநில பாஜக சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன.அந்த கட்சிகள் ஊழல் கொள்ளை நடத்துகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது டெல்லி ஏ.டி.எம். போல செயல்படும். மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்தால், அது ஒரு குடும்ப ஏ.டி.எம். ஆக இருக்கும். இந்த 2 கட்சிகளும் ஊழல்கள் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன. அதனால் ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்.

    மண்டியா, மைசூரு மண்டலத்தில் அந்த இரு கட்சிகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தது போதும். இந்த முறை பாஜகவை நீங்கள் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் இரட்டை என்ஜின் அரசை கொண்டு வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் கர்நாடகத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×