என் மலர்

  இந்தியா

  சாலை விபத்து
  X
  சாலை விபத்து

  ராஜஸ்தானில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
  ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் கண்டெல்வாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

  இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், படுகாயமடைந்த 10 பேரை மீட்டு அல்வார் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், காயமடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அர்பாஸ் (16), வாசிம் (16), பர்வேஸ் (17), ஆலம் (21) மற்றும் ஆசிப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  மேலும், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் விரைவில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
  Next Story
  ×