என் மலர்

  இந்தியா

  கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா
  X
  கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா

  காண்டிராக்டர் தற்கொலை விவகாரம்- கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்கொலைக்கு தூண்டியதாக 2 பிரிவில் உடுப்பி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல ஈஸ்வரப்பா உதவியாளர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது.
  கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டம் இன்டல்கா பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல் காண்டிராக்டரான இவர் ஊரக வளர்ச்சி துறை மந்திரி ஈஸ்வரப்பா தன்னிடம் 40 சதவீத கமி‌ஷன் கேட்பதாக புகார் கூறி இருந்தார்.

  இந்த நிலையில் காண்டிராக்டர் சந்தோஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் தனது தற்கொலைக்கு மந்திரி ஈஸ்வரப்பாதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

  இந்த நிலையில் காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை தொடர்பாக கர்நாடக மந்திரி ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டியதாக 2 பிரிவில் உடுப்பி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல ஈஸ்வரப்பா உதவியாளர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது.

  இதற்கிடையே ஈஸ்வரப்பா தன்னை சந்திக்க வருமாறு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சம்மன் அனுப்பி உள்ளார்.

  Next Story
  ×