search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை- மத்திய அரசு தகவல்

    நீதிபதி பணியிடங்களில் எந்த சாதிக்கு இடஒதுக்கீடு வழங்கப் படவில்லை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் குறித்து, மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை மந்திரி கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் இந்திய அரசியலமைப்பின் 217 மற்றும் 224 வது பிரிவுகளின் கீழ் செய்யப்படுகிறது, இதில்  எந்த சாதி அல்லது நபர்களுக்கு இடஒதுக்கீடும்  வழங்கவில்லை. எனவே சாதி வாரியான தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை.

    உயர் நீதிமன்றங்களில் 700 நீதிபதிகள் பணிபுரிந்து வருகிறார்கள்.  404 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது, ​​171 பரிந்துரைகள் அரசு மற்றும் உச்சநீதிமன்ற கொலீஜியம் இடையே பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. 

    உயர் நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பது நிர்வாக மற்றும் நீதித்துறைக்கு இடையே ஒரு தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த மற்றும் கூட்டுச் செயல்முறை ஆகும். 

    இதற்கு மாநில மற்றும் மத்திய அளவில் உள்ள பல்வேறு அரசியலமைப்பு அதிகாரிகளிடமிருந்து ஆலோசனை மற்றும் ஒப்புதல் தேவைப்படுகிறது. தற்போதுள்ள காலியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு அனைத்து  முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×