search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரண் ரிஜிஜு"

    • மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
    • உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாஜக அரசு மீதும் பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது.

    எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்தால் உங்கள் கூட்டணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ. என்று பெயர் வைப்பது கைகொடுக்காது.

    நாட்டை ஆளும் அதிகாரத்தை அரசாங்கம் இழக்கும்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்பதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். தவறான நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் வருத்தம் தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜம்மு காஷ்மீரில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு பயணம் செய்தார்.
    • அவர் சென்ற கார் மீது லாரி மோதியதில் மத்திய மந்திரி உயிர் தப்பினார்.

    ஜம்மு:

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு சாலை மார்க்கமாக இன்று ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.

    ராம்பான் அருகே சென்று கொண்டிருந்தபோது லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதியது. இதையடுத்து பாதுகாப்பு போலீசார் மந்திரியை காரிலிருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

    இந்த விபத்தில் மந்திரி கிரண் ரிஜிஜு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    மத்திய மந்திரி சென்ற கார் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ராகுல் காந்திக்காக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர்.
    • கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  ஒற்றுமையை வெளிப்படுத்தின. பாஜக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன. கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே கூட்டாக போராட்டங்களை நடத்தினர். அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக எம்.பி.க்கள் எதிர்முழக்கங்கள் எழுப்பினர். அதாவது, லண்டனில் இந்திய பாராளுமன்றம் குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக இருந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளிலும் பணிகள் முடங்கின. கடைசி நாளான இன்றும் மக்களவையில் எந்த பணியும் நடக்காமல் தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்ற முடக்கம் குறித்து மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

    ராகுல் காந்திக்காக காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் இடையூறு செய்தனர். கடைசி நாளிலும் அவையை சீர்குலைத்தனர். கருப்பு உடை அணிந்து மீண்டும் பாராளுமன்றத்தை அவமதித்தனர்.

    பாராளுமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். ஒரு எம்.பி. ராகுல் காந்திக்காக, காங்கிரசும், அவர்களின் ஆதரவாளர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

    காங்கிரசும் அதன் கும்பல்களும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சூரத் நீதிமன்றத்திற்கு எப்படி சென்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். அவர்கள் ஊர்வலம் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீதிபதிகளுக்கான சவால்கள் குறித்தும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
    • இந்தியாவில் நீதிபதிகள் ஒவ்வொரு நாளும் 50-60 வழக்குகளைக் கையாள்கின்றனர்.

    மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.

    விழாவில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    இந்தியாவில் மக்கள் தொகை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட பல்வேறு சவால்கள் நம் முன்பாக உள்ளன. நீதிபதிகளுக்கான சவால்கள் குறித்தும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பிற நாடுகளில் நீதிபதிகள் மிகவும் சவுகரியமாக வாழ்கின்றனர். நாளொன்றுக்கு 5,6 வழக்குகளை விசாரிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் நீதிபதிகள் ஒவ்வொரு நாளும் 50-60 வழக்குகளைக் கையாள்கின்றனர்.

    அதனால் ஏற்படும் மன அழுத்தம் அதிகம். சமூக வலைதளங்களில் ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. வழக்குகள் முடியும் அதே நேரத்தில் இரு மடங்கு வழக்குகள் புதிதாக தாக்கலாகின்றன. அதனால் தான் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உரிய நீதி வழங்கப்படும் போது, நீதிமன்றங்கள் மீதான சாமானியரின் நம்பிக்கை உயர்கிறது.

    நீதிமன்றத்தில் மொழி, மிகப்பெரும் சவாலாக உள்ளது. தமிழ் பழம்பெரும் மொழி. உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காடு மொழியாக்க கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால், வருங்காலத்தில் உச்சநீதி மன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும். இந்திய மொழிகள் நீதி மன்றங்களில் பயன்பாட்டில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடித்தட்டு மக்களும் எளிதாக அணுகும் வகையில் நீதிமன்ற கட்டமைப்பு விரைவில் அமையும்.

    பொதுமக்கள் காவலர்களை பார்த்தால் அச்சப்படும் விதமாக இருக்கக் கூடாது. பாதுகாப்பாக உணர வேண்டும். அதே போல் பொதுமக்கள் நீதி மன்றத்தை எளிதில் அணுகும்படி இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து ஏற்கனவே பேசியுள்ளேன்.
    • ஒரு மொழியை மட்டும் திணிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன்.

    நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்12வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    (பொதுமக்கள்) நீதித்துறையை எளிதாக அணுகுவதற்கு, பிராந்திய மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருப்பது காலத்தின் கட்டாயம். நமது பிரதமர் நமது கலாச்சாரம் மற்றும் நமது மொழியுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும்.

    நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையில் எதிர்காலத்தில் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடமும் ஏற்கனவே நான் பேசியுள்ளேன்.

    உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் (எதிர்காலத்தில்) தமிழ் மொழி முக்கிய இடம் பெறுவதைக் கண்டு நாம் அனைவரும் பெருமைப்படுவோம். தமிழ் மிகச் சிறந்த மொழி, ஒரு மொழியை மட்டும் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தமிழகத்தில் இருந்து இந்தியாவுக்குள் அதிக அகதிகள் வருவதாக மக்களவையில் மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியது அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கியது. #MonsoonSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் அகதிகள் தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசினார். தனது பேச்சில், “வங்கதேசம், மியான்மர், தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் அகதிகள் வருகிறார்கள்” என்று கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

    தமிழகம் இந்தியாவில் இருக்கிறது, தமிழக்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் எப்படி நுழைய முடியும் என்று அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் எம்.பி.க்கள் கோஷமிட்டு, கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து, நான் இலங்கையில் இருந்து அகதிகள் என்று கூறுவதற்கு பதிலாக, தமிழ்நாடு என்று வாய்தவறி கூறிவிட்டேன் என்று ரிஜிஜு கூறினார். ஆனால், அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட்டு, உறுப்பினர்களை அமைதிப்படுத்தி, தவறுதலாக மந்திரி அவ்வாறு பேசிவிட்டார் அமைதியாக அமருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
    ×