என் மலர்tooltip icon

    இந்தியா

    வக்பு திருத்த மசோதா: மாநிலங்களவையில் 17 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டு சாதனை- கிரண் ரிஜிஜு
    X

    வக்பு திருத்த மசோதா: மாநிலங்களவையில் 17 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்டு சாதனை- கிரண் ரிஜிஜு

    • 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம்.
    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு சட்டம் நடைமுறைக்கு வரும்.

    நேற்று முன்தினம் மக்களவையில் விவாதம் நடைபெற்றது. மதியம் தொடங்கிய விவாதம், நள்ளிரவு வரை நடைபெற்று அதன்பின் வாக்கெடுப்பு நடைபெற்றது.

    அதேபோன்று மாநிலங்களவையிலும் நேற்று மதியம் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. நேற்று 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடைபெற்றதாக சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிண் ரிஜிஜு கூறியதாவது:-

    நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நாம் ஒரு முக்கியமாக சாதனைப் படைத்துள்ளோம். 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனைப் படைத்துள்ளோம். இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது.

    இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    Next Story
    ×