search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி
    X
    பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி

    உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பது அரசின் கடமை.. உதவி அல்ல- ராகுல் காந்தி

    அதன்மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 6,200 இந்திய மாணவர்களை மீட்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 நாட்களில் 7400 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    உக்ரைன் மீதான ரஷியா தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே குண்டு வெடிப்பு, ஏவுகணை தாக்குதல் உள்ளிட்டவையால் மக்கள் கலங்கி போய் உள்ளனர். தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இதுபோல், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.

    இதையடுத்து, மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 6,200 இந்திய மாணவர்களை மீட்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 நாட்களில் 7400 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ஆபரேஷன் காங்கா திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசு முதுகைத் தட்டி கொண்டிருக்கும் வேளையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "தாக்குதல் நிறைந்த உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது அரசின் கடமை. அரசு செய்யும் உதவி அல்ல" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்..  மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்கள்... முந்தைய அரசுகள் மீது குற்றம்சாட்டும் பிரதமர் மோடி
    Next Story
    ×