search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உக்ரைன் ரஷ்யா மோதல்"

    • உக்ரைன் மீதான ரஷியப்போரின் விளைவுகளால் உலகமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
    • ரஷியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகளால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி வரவேற்றார்.

    ஜனாதிபதி மாளிகையில் ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சை பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து ஜெர்மனி பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

    ஜெர்மனியில் 16 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஏஞ்சலா மெர்க்கலைத் தொடர்ந்து, பிரதமராகி உள்ள ஒலாப் ஸ்கோல்சின் முதல் இந்தியப் பயணம் இதுதான் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் இடையே டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இவ்விரு தலைவர்களும் கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி இந்தோனேசியாவின் பாலித்தீவில் 'ஜி-20' உச்சி மாநாட்டின் இடையே சந்தித்துப் பேசியதும் நினைவு கூரத்தக்கது.

    நேற்று பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சும் நடத்திய இரு தரப்பு பேச்சு வார்த்தையில், இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான விஷயங்கள், ராணுவ ஒத்துழைப்பு, பிராந்திய பிரச்சினைகள், உலகளாவிய விவகாரங்கள் இடம் பெற்றன.

    இரு தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சும் நிருபர்களைச் சந்தித்தனர்.

    பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையேயான உறவு, ஆழமான புரிதல் அடிப்படையிலானது. இரு தரப்பு வர்த்தக பரிமாற்ற வரலாறு உள்ளது. ஐரோப்பாவில் ஜெர்மனி எங்களது மிகப்பெரிய வர்த்தகக்கூட்டாளி ஆகும்.

    உக்ரைன் மோதல் தொடங்கியதில் இருந்து, மோதல்களை ராஜ தந்திர ரீதியிலும், பேச்சுவார்த்தை மூலமும் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வந்துள்ளது. உக்ரைன் மோதலில் எந்த அமைதி செயல்முறைக்கும் பங்களிப்பு செய்வதற்கு இந்தியா தயாராக இருக்கிறது.

    கொரோனா வைரஸ் தொற்று, உக்ரைன் மோதல் ஆகியவற்றின் தாக்கம், ஒட்டுமொத்த உலகத்திலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் அவற்றின் காரணமாக தள்ளாடுகின்றன.

    பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், ஜெர்மனியும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை கொண்டுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதற்கு உறுதியான நடவடிக்கை தேவை என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

    இந்தியா, ஜெர்மனி இடையேயான கூட்டில், இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு முக்கியமான தூணாக விளங்குகிறது. இரு தரப்பிலும் முக்கியமான அனைத்து விஷயங்கள், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக பேசினோம்.

    ஐரோப்பாவின் மிகப்பெரிய வர்த்தகக்கூட்டாளியாகத் திகழ்வதுடன், இந்தியாவிலும் ஜெர்மனி முதலீட்டின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

    இரு பெரிய ஜனநாயக பொருளாதார நாடுகள் இடையே ஒத்துழைப்பு பெருகி வருவது, இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் நன்மை பயப்பதோடு மட்டுமல்லாமல், இன்றைக்கு பொருளாதார அழுத்தத்துக்குள்ளாகி ஆளாகி உள்ள ஒட்டு மொத்த உலகத்துக்கும் சாதகமான செய்தியாக அமைகிறது.

    மூன்றாம் நாடுகளின் வளர்ச்சிக்காக, முத்தரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பின் கீழ், இந்தியாவும், ஜெர்மனியும் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துகின்றன.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் கூறியதாவது:-

    உக்ரைன் மீதான ரஷியப்போரின் விளைவுகளால் உலகமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. வன்முறையைப் பயன்படுத்தி, யாரும் எல்லைகளை மாற்றிக்கொண்டு விட முடியாது.

    உக்ரைன் போர் பெரும் இழப்புகளுக்கும், அழிவுக்கும் வழிநடத்தி இருக்கிறது. இது ஒரு பேரழிவு ஆகும்.

    இந்தியா மகத்தான வளர்ச்சியை கண்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு மிகவும் நல்லது. ரஷியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகளால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதே உணவு மற்றும் எரிசக்தி வினியோகத்தை உறுதி செய்தல் வேண்டும்.

    எங்களுக்கு திறமையும், ஆற்றலும் வாய்ந்த பணியாளர்கள் தேவை. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பமும், மென் பொருள் உருவாக்கமும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் திறன் வாய்ந்த பல நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் மிகப்பெரும் திறமைகள் உள்ளன. இரு தரப்பு ஒத்துழைப்பினால் நாங்கள் பலன் அடைய விரும்புகிறோம். திறமையான பணியாளர்களை பணியமர்த்தி, ஈர்க்க ஜெர்மனி விரும்புகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.
    • ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை ஐ.நா. வன்மையாக கண்டித்தது.

    கீவ்:

    உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷியா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.

    இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது. அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷியா உறுதியளித்திருந்தது.

    ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்திலேயே ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.

    துறைமுகத்தின் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. எனினும் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உக்ரைன் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை ஐ.நா. வன்மையாக கண்டித்தது.

    இந்த நிலையில் ஒடேசா துறைமுகத்தில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைனின் போர் கப்பல் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

    அதுமட்டும் இன்றி ஒடேசா துறைமுகத்தில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கும் நிர்மூலமாக்கப்பட்டதாக ரஷியா ராணுவம் கூறியது. எனினும் இது குறித்து உக்ரைன் தரப்பு உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    இதனிடையே ஒப்பந்தத்தை மீறி ஒடேசா துறைமுகம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம் என சாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த தாக்குதல் ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை அழித்துவிட்டதாக கூறினார்.

    அதே சமயம் ஒப்பந்தத்தில் வெளிப்படையான மீறல் இருந்தபோதிலும் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தாக்கியது.
    • பயங்கரவாதிக்கு எதிராக போரில் பங்கேற்று அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி தலிதா டோவாலே போரில் பங்கேற்றார்.

    துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தாக்கியது.

    இதில் தலிதா டோவாலே பலியானார். இவர் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிக்கு எதிராக போரில் பங்கேற்று அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். தற்போது உக்ரைன் மீதான போர் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போர் தொடங்குவதற்கு முன்பு சுமார் 1 லட்சம் பேர் வசித்து வந்த செவிரோடோ டொனட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர்.
    • ரஷிய படைகளின் இறுதி தாக்குதல் நடத்தி வருவதால் அந்த நகரம் இன்னும் ஓரிரு நாளில் வீழ்ந்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 மாதங்களை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இருந்தபோதிலும் ரஷியாவின் மும்முனை தாக்குத லால் உக்ரைனில் பல நகரங்கள் ரஷியா வசம் வீழ்ந்து விட்டது.

    தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் முயற்சியில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அங்குள்ள தொழில் நகரமான செவிரோடோ டொனட்ஸ்க்கின் 80 சதவீத பகுதிகளை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

    மீதமுள்ள 20 சதவீத பகுதிகளை பிடிக்க தொடர் தாக்குதலில் ரஷியா இறங்கி உள்ளது. அந்த நகரில் உள்ள அசோட் ரசாயன ஆலையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்த ஆலை மீது ரஷிய படையினர் கடும் தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர்.

    மேலும் செவிரோடோ டொனட்ஸ்க் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 3 முக்கிய பாலங்களை ரஷிய படையினர் தகர்த்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக உக்ரைன் படையினர் மேலும் முன்னேற முடியாமல் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.

    போர் தொடங்குவதற்கு முன்பு சுமார் 1 லட்சம் பேர் வசித்து வந்த செவிரோடோ டொனட்ஸ்க் நகரில் தற்போது 12 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். முக்கிய பாலங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு உள்ளதால் அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ரஷிய படைகளின் இறுதி தாக்குதல் நடத்தி வருவதால் அந்த நகரம் இன்னும் ஓரிரு நாளில் வீழ்ந்து விடும் என்ற நிலை உருவாகி உள்ளது.

    லுஹா்மான்ஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பெரிய நகரமான செவிரோடோ டொனட்ஸ்க்கை கைப்பற்றி விட்டால் அந்த மாகாணம் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என கூறப்படுகிறது.

    ×