என் மலர்

  நீங்கள் தேடியது "ukraine russia conflict"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.
  • ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை ஐ.நா. வன்மையாக கண்டித்தது.

  கீவ்:

  உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழலில், அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய ரஷியா, கருங்கடல் பகுதியில் போா்க் கப்பல்களை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியது.

  இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால், தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐ.நா. முன்னெடுத்தது. அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷியாவும், உக்ரைனும் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தில் கருங்கடல் பகுதியில் உள்ள உக்ரைன் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என ரஷியா உறுதியளித்திருந்தது.

  ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்திலேயே ஒப்பந்தத்தை மீறி கருங்கடலில் உள்ள உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.

  துறைமுகத்தின் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்கியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. எனினும் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உக்ரைன் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை ஐ.நா. வன்மையாக கண்டித்தது.

  இந்த நிலையில் ஒடேசா துறைமுகத்தில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒடேசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைனின் போர் கப்பல் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

  அதுமட்டும் இன்றி ஒடேசா துறைமுகத்தில் அமெரிக்காவால் வழங்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஆயுத கிடங்கும் நிர்மூலமாக்கப்பட்டதாக ரஷியா ராணுவம் கூறியது. எனினும் இது குறித்து உக்ரைன் தரப்பு உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

  இதனிடையே ஒப்பந்தத்தை மீறி ஒடேசா துறைமுகம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம் என சாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த தாக்குதல் ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கான சாத்தியத்தை அழித்துவிட்டதாக கூறினார்.

  அதே சமயம் ஒப்பந்தத்தில் வெளிப்படையான மீறல் இருந்தபோதிலும் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.
  • ஏவுகணைகள் டினிப்ரோ நகரில் உள்ள தொழில்துறை ஆலை மற்றும் அதற்கு அடுத்துள்ள பரபரப்பான தெரு மீது தாக்கியது.

  உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.

  இந்நிலையில், உக்ரைனின் டினிப்ரோ நகரின் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அப்பிராந்திய ஆளுநர் வாலன்டின் ரெனிசென்கோ கூறினார்.

  இதுகுறித்து ஆளுநர் மேலும் கூறுகையில், " ஏவுகணைகள் டினிப்ரோ நகரில் உள்ள தொழில்துறை ஆலை மற்றும் அதற்கு அடுத்துள்ள பரபரப்பான தெரு மீது தாக்கியது. ரஷிய தாக்குதல் மூன்று பேரின் உயிரை பறித்தது. மேலும் 15 பேர் காயமடைந்தனர். அழிவின் அளவை நாங்கள் தீர்மானிக்கின்றோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏவுகணை வீச்சில் 50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் தீயில் கருகி சேதம் ஆனது.
  • பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

  உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 5 மாதங்களை கடந்துவிட்டது. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.

  இருந்தபோதிலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்து போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.

  இந்தநிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் இருந்து 268 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பகுதியான வினிட்சியா நகரில் நேற்று ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. அங்குள்ள முக்கிய அரசு அலுவலக கட்டிடம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கட்டிடம் மட்டும் அல்லாமல் அருகில் இருந்த குடியிருப்பு கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தது.

  இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 23 அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். 90-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

  அடுத்தடுத்து 8 தடவை நடந்த ஏவுகணை வீச்சில் 50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் தீயில் கருகி சேதம் ஆனது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 5 பேர் இறந்தனர்.

  ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பொதுமக்கள் மீது வேண்டுமென்றே குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

  ×