search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊரடங்கு உத்தரவு (கோப்பு படம்)
    X
    ஊரடங்கு உத்தரவு (கோப்பு படம்)

    கொரோனா அதிகரிப்பு- ஆந்திராவில் 18-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு

    அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. நேற்று 1831 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்தின நாள் பாதிப்பு 948 ஆக இருந்தது. நேற்று மட்டும் 900 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திராவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பை யொட்டி ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு ஆந்திராவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... கொரோனாவுடன் வாழ அமெரிக்கா தயாராகிறது - மூத்த மருத்துவ நிபுணர் சொல்கிறார்

    Next Story
    ×