search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பொதுச் செயலாளர் வேணுகோபால்
    X
    பொதுச் செயலாளர் வேணுகோபால்

    கோவா தேர்தலில் திரிணாமுலுடன் காங்கிரஸ் கூட்டணி என்பது வதந்தியே - காங்கிரஸ்

    வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு இந்தியா திரும்பினார். கோவா சட்டசபை தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    கோவாவில் பிப்ரவரி14ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கோவா சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கோவா சட்டசபை தேர்தலில் திரிணாமுலுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி என்பது வெறும் வதந்தி என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கோவா சட்டசபை தேர்தலில் திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. அந்த செய்தியில் துளியும் உண்மையில்லை, வெறும் வதந்தியே என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×