search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தெலுங்கானாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லை: சுகாதார துறை அறிவிப்பு

    ஒமைக்ரான் தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்குவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    ஐதராபாத் :

    இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடம் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.

    ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா எச்சரிக்கை அடைந்தது. இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்குவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை.

    அவர்களில் கர்நாடகாவில் இருவருக்கும், மராட்டியத்தில் 10, ராஜஸ்தானில் 9, குஜராத் மற்றும் டெல்லியில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தெலுங்கானாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெலுங்கானா சுகாதார துறை அறிவித்து உள்ளது.
    Next Story
    ×