என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 35,662 பேருக்கு தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,26,32,222 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 33,798 பேர் குணமடைந்துள்ளனர்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் ஒரே நாளில் 281 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,529 ஆக உயர்ந்துள்ளது.

  கொரோனா தடுப்பூசி

  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,26,32,222 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 33,798 பேர் குணமடைந்துள்ளனர்.
   
  நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,40,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 79.42 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 2,15,98,046 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


  Next Story
  ×