search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும்.

    இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்கியது. சில வாரங்கள் தொடர்ந்து பெய்த மழை பின்னர் படிப்படியாக குறைந்தது.

    கடந்த 2 வாரங்களாக மழையின் தீவிரம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

    இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளது.

    கடல் சீற்றம்

    தென்மேற்கு பருவமழை
    மீண்டும் வலுவடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும். மேலும் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் காணப்படும் என்று கூறியுள்ளது.

    வானிலை ஆய்வு மைய தகவலை தொடர்ந்து கேரளாவில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதுபோல எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    மேலும் இம்மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


    Next Story
    ×