search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரகாந்த் பாட்டீல்
    X
    சந்திரகாந்த் பாட்டீல்

    தேசிய தலைவராகும் சரத்பவாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது: சந்திரகாந்த் பாட்டீல்

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த காலத்திலும் இதேபோல தேசிய தலைவராக மாற முயற்சி செய்துள்ளார். ஆனால் அதில் அவர் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை.
    பால்கர் :

    2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிரணிகளை ஒன்றுதிரட்டி 3-வது அணி அமைக்கும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் டெல்லியில் 8 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சந்திப்பு நடந்தது. இது குறித்து மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த காலத்திலும் இதேபோல தேசிய தலைவராக மாற முயற்சி செய்துள்ளார். ஆனால் அதில் அவர் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை.

    கடந்த காலத்திலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க அவர் முயற்சி மேற்கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல பாஜகவில் இருந்து பிரிந்த சிவசேனா மீண்டும் பழையபடி பாஜகவுடன் கூட்டணி சேர உள்ளதாக வெளியாகும் தகவல்களை சந்திரகாந்த் பாட்டீல் நிராகரித்தார். மேலும் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் கூட்டணியின் எதிர்காலம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இந்த கூட்டணி நிலையற்றது. எப்போது வேண்டுமானாலும் சரிந்துவிடும்” என்றார்.
    Next Story
    ×