search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம் - டெல்லி அரசு அனுமதி

    டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனா-வைரஸ் இரண்டாவது அலையின் தீவிரம் தணியத் தொடங்கியிருக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் படிப்படியாக தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளது. 

    இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் வரும் திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, டெல்லி சந்தைகள், வணிக வளாகங்கள் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 

    அதேபோல், மெட்ரோ-ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    மேலும், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். அரசு அலுவலகங்களில் குரூப்-ஏ பிரிவு ஊழியர்கள் 100 சதவீதம் வருகை தரவேண்டும். குரூப் -பி பிரிவு  ஊழியர்கள் 50 சதவீதத்தினர் வருகை தரவேண்டும் என தெரிவித்தார். 
    Next Story
    ×