search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமாரசாமி
    X
    குமாரசாமி

    கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்: குமாரசாமி

    பி.யூ.கல்லூரி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒற்றை தேர்வு முறையை கொண்டு வர வேண்டும். பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி எடுத்த முடிவு காரணம்.
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வை ரத்து செய்துவிட்டு, 10-ம் வகுப்பு தேர்வை மட்டும் நடத்த அரசு எடுத்துள்ள முடிவு சரியல்ல. பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமாரின் இந்த முடிவை கண்டு மாநில மக்கள் சிரிக்கிறார்கள். அதனால் அரசு தனது முடிவை வாபஸ் பெற வேண்டும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

    குழந்தைகளின் வாழ்க்கையுடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும். பள்ளி கல்வித்துறை மந்திரியின் முடிவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கடிவாளம் போட வேண்டும். பி.யூ.கல்லூரி, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒற்றை தேர்வு முறையை கொண்டு வர வேண்டும். பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி எடுத்த முடிவு காரணம்.

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடிவு செய்திருப்பது, பெற்றோர், மாணவர்களின் பொறுமையை சோதிப்பது போல் உள்ளது. ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மந்திரி சுரேஷ்குமார் மவுனமாக உள்ளார். மதிய உணவு கிடைக்காமல் வறுமையில் வாடும் ஏழை குழந்தைகள் குறித்தும் அவர் மவுனம் சாதிக்கிறார்.

    இவ்வாறு
    குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×