search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவுக்கு பலி
    X
    கொரோனாவுக்கு பலி

    கர்நாடகத்தில் கொரோனாவுக்கு 1,000 அரசு ஊழியர்கள் பலி

    கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1,000 அரசு ஊழியர்கள் தங்களது உயிரை பறிகொடுத்து உள்ளது தெரியவந்து உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை 1 லட்சம் அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனா முதல் அலையை மாநில அரசு சிறப்பாக எதிர்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்தது. கடந்த ஜனவரி முதல் மார்ச் மாத இறுதி வரை மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் ஏப்ரல்-மே மாதங்களில் கொரோனா 2-வது அலையில் ஏராளமானோர் சிக்கினர். பலர் தங்களது உயிரை பறி கொடுத்தனர்.

    கொரோனாவை தடுக்க அரசும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ்காரர்கள், ஆஷா ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கொரோனா எதிராக முன்களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கடும் சவாலை அளித்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1,000 அரசு ஊழியர்கள் தங்களது உயிரை பறிகொடுத்து உள்ளது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து கர்நாடக மாசில அரசு ஊழியர்கள் சங்க தலைவர் சடாக்‌ஷரி கூறும்போது, எங்கள் சங்கம் எடுத்து உள்ள கணக்குபடி பார்த்தால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 518 நிரந்தர, ஒப்பந்த அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு இறந்து உள்ளனர். ஆனால் பிற சங்கங்கள் வழங்கிய தரவை கணக்கு செய்தால் இதுவரை 1,000 அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு இறந்து உள்ளார்கள்.

    கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை 1 லட்சம் அரசு ஊழியர்கள்
    கொரோனா
    வுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகத்தில் 6½ லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். கொரோனாவுக்கு இறக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கி வருகிறது. ஆனால் இந்த பயன்கள் பெரும்பாலானோருக்கு கிடைப்பது இல்லை என்றார்.

    உயிரிழந்த அரசு ஊழியர்களில் ஆசிரியர்களும் அடங்குவார்கள். கொரோனாவுக்கு 400 ஆசிரியர்கள் தங்களது உயிரை இழந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களாக கலபுரகி, பெலகாவியில் தான் அதிகளவில் ஆசிரியர்கள் இறந்து உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    இதன்காரணமாக அவர்கள் கொரோனா பாதித்து இறந்ததாக கர்நாடக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் பசவராஜ் குரிகர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுபோல வனத்துறை ஊழியர்கள் 21 பேர் கொரோனாவுக்கு இறந்து உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறியுள்ளன.
    Next Story
    ×