search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலா
    X
    சுற்றுலா

    கேரளாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை - மாநில அரசு முடிவு

    கேரளாவில் கொரோனா தொற்று குறையத்தொடங்கி இருப்பதால், சுற்றுலாத்துறையை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள அரசுக்கு அதிக வருவாயை பெற்றுத்தரும் துறைகளில் சுற்றுலாத்துறை முக்கியமானது. ஆனால் தற்போதைய கொரோனா சூழல் காரணமாக இந்த துறை பெருத்த பாதிப்பை சந்தித்து வருகிறது.

    தற்போது அங்கு தொற்று குறையத்தொடங்கி இருப்பதால், இந்த துறையை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை இறுதி செய்து, விரைவில் செயல்படுத்தவும், இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் மாநிலத்தின் பிற துறைகளுடன் இணைந்து சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.
    Next Story
    ×