search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வெப்ப பரிசோதனை
    X
    கொரோனா வெப்ப பரிசோதனை

    கர்நாடகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட தேவை இல்லை

    மகாராஷ்டிரா உள்பட அந்த 4 மாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர தேவை இல்லை என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
    பெங்களூரு

    கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைவாக இருந்தது. அந்த நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. இதையடுத்து கர்நாடக அரசு, மகாராஷ்டிரா உள்பட மேற்கண்ட 4 மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் மருத்துவ சான்றிதழை கொண்டு வருவது கட்டாயம் என்று உத்தரவிட்டது.

    இந்த நிலையில் கர்நாடக அரசு அந்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இனி மகாராஷ்டிரா உள்பட அந்த 4 மாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர தேவை இல்லை என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதே நேரத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

    இந்த சூழ்நிலையில் அரசு தனது முந்தைய உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×