search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அனில் அம்பானி நடைபயிற்சி சென்றதால் சர்ச்சை
    X
    கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அனில் அம்பானி நடைபயிற்சி சென்றதால் சர்ச்சை

    கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அனில் அம்பானி நடைபயிற்சி சென்றதால் சர்ச்சை

    மகாபலேஷ்வர் பகுதியில் உள்ள தனியார் கோல்ப் பந்து மைதானத்தில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபயிற்சி செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    மும்பை :

    மராட்டியத்தில் அதிவேக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. குறிப்பாக மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசமான சத்தாரா மாவட்டம் மகாபலேஷ்வர் பகுதியில் உள்ள தனியார் கோல்ப் பந்து மைதானத்தில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபயிற்சி செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த மைதானத்தை மூட மகாபலேஷ்வர் நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து நகராட்சி தலைமை அதிகாரி பல்லவி பட்டேல் கூறுகையில், ‘‘அனில் அம்பானி குடும்பத்தினருடன் மைதானத்தில் நடை பயிற்சி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்த பிறகு, அந்த கோல்ப் கிளப்பிற்கு நோட்டீஸ் அனுப்பினோம்.. தற்போது அந்த மைதானம் மூடப்பட்டுவிட்டது. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை’’ என்றார்.
    Next Story
    ×