என் மலர்

  செய்திகள்

  டி.கே.சிவக்குமார்
  X
  டி.கே.சிவக்குமார்

  அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: டி.கே.சிவக்குமார் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகில் பெரும்பாலான நாடுகள் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்குகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டுமே மத்திய அரசு தடுப்பூசிக்கு விலையை நிர்ணயம் செய்துள்ளது என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
  பெங்களூரு :

  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

  பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும். மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக அவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தி தடையை ஏற்படுத்தி இருப்பது சரியல்ல. கர்நாடகத்தில் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்த விஷயத்தில் அரசு மவுனம் காப்பது சரியல்ல.

  உலகில் பெரும்பாலான நாடுகள் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்குகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டுமே மத்திய அரசு தடுப்பூசிக்கு விலையை நிர்ணயம் செய்துள்ளது. கர்நாடகத்தில் மாநில அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும். இதற்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்து அரசு வெளியிட வேண்டும்.

  இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

  எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில், "பிரதமர் மோடி தான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×