search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    வாரணாசியில் கொரோனா நிலவரம்- அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    வாரணாசியில் மூன்று முக்கிய கோவில்களுக்கு வருவோர், கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்கும்படி என உத்தரவிடப்பட்டுள்ளது.
    வாரணாசி:

    நாட்டின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. வாரணாசியில் நேற்று 1664 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் 27,357 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார். இதில், வாரணாசி உயர் அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர். அப்போது அதிகாரிகளுக்கு பிரதமர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

    வாரணாசி

    வாரணாசியில் தொற்று அதிகரிப்பதால், விஸ்வநாதர் ஆலயம், சங்கத்மோச்சன் ஆலயம், அன்னபூர்ணா ஆலயம் ஆகிய மூன்று முக்கிய கோவில்களுக்கு வருவோர், கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டல்களிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வாரணாசிக்கு வர திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களை ரத்து செய்யும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
    Next Story
    ×