search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி போடும் பணி
    X
    தடுப்பூசி போடும் பணி

    தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது... இந்தியாவில் கொரோனா நிலவரம்

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,31,968  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,60,542 உயர்ந்துள்ளது. 

    நேற்று ஒரே நாளில் 780 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,642 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பரிசோதனை

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 61,899 பேர் குணமடைந்துள்ளனர். 

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,79,608 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 9,43,34,262 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×