என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக கூறி வைரலாகும் வீடியோ
Byமாலை மலர்23 March 2021 5:03 AM GMT (Updated: 23 March 2021 5:03 AM GMT)
கர்நாடக மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது ஒரு வாரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2.20 நிமிடங்கள் ஓடும் வீடியோவில், முதல்வர் அம்மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு இரவு நேர கிளப், மதுபான கூடங்கள், திரையரங்குகள், மால்கள் மூடப்படுவதாக அறிவிக்கிறார். மேலும் மக்கள் அதிகம் கூடும் திருமணம், விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கிறார்.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறி வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. முதல்வரின் கட்டுப்பாடுகள் அறிவிப்பு பற்றி கடந்த ஆண்டு மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் பதிவிடப்பட்ட செய்தி தொகுப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகும் வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என உறுதியாகிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×