search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவெந்து அதிகாரி
    X
    சுவெந்து அதிகாரி

    பாஜக வேட்பாளர்கள் பட்டியல்... மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவெந்து அதிகாரி போட்டி

    சிங்கூரில் டாடா நானோ தொழிற்சாலைக்கு நிலம் கையப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சுவெந்து அதிகாரியும், அவரது சகோதரர் சவுமேந்து அதிகாரியும் பெரும் பங்கு வகித்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரசில் இருந்து பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், உள்ளாட்சி பிரநிதிகள் பாஜக பக்கம் தாவியிருப்பதால் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவெந்து அதிகாரி, தனது தொகுதியான நந்திகிராமத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி, நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், மேற்கு வங்கத்தில் முதல் இரண்டு கட்ட தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்களை பாஜக இன்று அறிவித்தது. கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். இந்த வேட்பாளர் பட்டியலில் சுவெந்து அதிகாரியும் இடம்பெற்றுள்ளார். அவர் நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திரிணாமுல் காங்கிரசின் எழுச்சிக்கு நந்திகிராமம் போராட்டம் முக்கியமாக அமைந்தது. இடதுசாரி ஆட்சியின்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் தொகுதியின் சிங்கூரில் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் நடந்தது. டாடா நானோ தொழிற்சாலைக்கு நிலம் கையப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடந்த அந்த போராட்டத்தில் சுவெந்து அதிகாரியும், அவரது சகோதரர் சவுமேந்து அதிகாரியும் பெரும் பங்கு வகித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கும் அந்த போராட்டம்தான் அடிப்படையாக அமைந்தது. அந்த நந்திகிராமம் தொகுதியில் சுவெந்து அதிகாரி தொடர்ந்து போட்டியிட்டு வென்று வந்தார். 

    தற்போது மம்தாவும், சுவெந்தும் அதே தொகுதியில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க களமிறங்கி உள்ளனர். எனவே, பரபரப்பான பிரசாரங்களுக்கும், கருத்து மோதல்களுக்கும் பஞ்சம் இருக்காது. 
    Next Story
    ×