search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மன்மோகன் சிங் சொன்னதை செய்திருக்கிறோம், இதற்காக பெருமைப்படுங்கள் -மோடி பேச்சு

    வேளாண் சீர்திருத்தங்கள் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதை செயல்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    டெல்லி எல்லைககளில் போராடும் விவசாயிகள் போராட்டதை முடித்துக்கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. 

    மன்மோகன் சிங் அவர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்கள் கூறியதை நான் இங்கே படிக்கிறேன். வேளாண் சட்டங்கள் விஷயத்தில் யு-டர்ன் எடுத்தவர்கள், ஒருவேளை மன்மோகன் சிங் அவர்களின் கருத்திற்கு உடன்படுவார்கள். 

    ‘1930களில்  அமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் முறை காரணமாக வேறு சிக்கல்கள் உள்ளன. இது நமது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அதிக வருமானம் பெறும் இடத்தில் விற்பனை செய்வதைத் தடுக்கிறது. சந்தைப்படுத்துதலில் உள்ள அனைத்து தடைகளையும் அகற்றுவதே எங்கள் நோக்கம்’ என்று மன்மோகன் சிங் கூறினார். மன்மோகன் சிங்கின் அந்த கனவை மோடி செயல்படுத்துகிறார் என்பதில் நீங்கள் பெருமைப்பட வேண்டும்.

    முன்னாள் வேளாண் மந்திரி சரத் பவாரும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்களும் வேளாண் சீர்திருத்தங்களை ஏதேனும் ஒரு வடிவத்தில் ஆதரித்து செயல்படுத்தியுள்ளன.

    சரத் பவார், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அனைத்து அரசாங்கங்களும் வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கு ஆதரவாக இருந்தன. அவர்களால் அதை முழுமையாக செய்ய முடிந்ததோ, இல்லையோ, ஆனால் எல்லோரும் செய்ய வேண்டும் என்று கூறினர்.

    இவ்வாறு மோடி பேசினார்.
    Next Story
    ×