search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    இணையத்தில் வைரலாகும் மின்சார ரெயில் வீடியோ

    மின்சார ரெயில் ஒன்று அதிவேகமாக சீறிப்பாயும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ரெயில் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் இருப்பது ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ரெயில்கள் எப்-16 போர் விமானத்தை விட இருமடங்கு வேகமாக செல்லும் திறன் கொண்டிருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஐந்து நிமிடங்கள் ஓடும் வைரல் வீடியோ ரெயிலினுள் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. வீடியோவில் ஸ்பீடோமீட்டர் மற்றும் வரைபடங்களின் காட்சி இடம்பெற்று இருக்கிறது. ஜப்பானின் புதிய எலெக்ட்ரிக் ரெயில் மணிக்கு 4800 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த ரெயில் ஒசாகாவில் இருந்து டோக்கியோ வரையிலான 515 கிலோமீட்டர் தூரத்தை 10 நிமிடங்களில் கடந்துவிடும். இது போர் விமானத்தை விட நான்கு மடங்கு வேகத்திலும், எப்16 போர் விமானத்தை விட இருமடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது எனும் தலைப்பில் வைரல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது உண்மையான ரெயில் பயணத்தின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ ஒசாகாவில் இருந்து டோக்கியோ சென்ற அதிவேக ரெயிலில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். இந்த பயண நேரம் மொத்தம் 2.5 மணி நேரங்கள் ஆகும்.  

    அந்த வகையில், மணிக்கு 4800 கிலோமீட்டர் வேகத்தில் மின்சார ரெயில் சென்றதாக கூறி வைரல் வீடியோவுடன் வலம்வரும் தகவலில் துளியும் உண்மையில்லை என்பது தெளிவாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×