search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குஜராத், அசாமில் காலியாக உள்ள 3 மேல்சபை இடங்களுக்கு இடைத்தேர்தல்

    குஜராத், அசாமில் காலியாக உள்ள 3 மேல்சபை இடங்களுக்கு இடைத்தேர்தல் மார்ச் 1-ந்தேதி நடத்தப்பட இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    குஜராத்தில், அகமத் படேல் (காங்கிரஸ் மூத்த தலைவர்) நவம்பர் 25-ந்தேதியும் மற்றும் அபய் பரத்வாஜ் (பா.ஜ.க.) டிசம்பர் 1-ந்தேதியும் மரணமடைந்தனர். அவர்களது பதவி வரிசை முறையே 2023 மற்றும் 2026 வரை இருந்ததால் அவர்கள் இறப்பிற்கு பின்பு அந்த இரு தொகுதிகள் காலியிடமாகின.

    இதேபோல அசாமில் போடோ மக்கள் முன்னணி எம்.பி. பிஸ்வாஜித் டைமாரி தனது பதவியை நவம்பர் இறுதியில் ராஜினாமா செய்தார். அவரது பதவி 2026 வரை இருந்தது. எனவே இந்த தொகுதியும் காலியானது.

    காலியான 3 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் 11-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்தல் மார்ச் 1-ந்தேதி நடத்தப்பட இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்ததும் அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடக்க இருக்கிறது.
    Next Story
    ×