search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    ஜனவரி 26 டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ

    டெல்லியில் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி கலவரமாக போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதலில் முடிந்தது. இந்நிலையில், போராட்டக்களத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வைரல் வீடியோவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை உடைக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோ போலீசாரை குற்றம்சாட்டும் தலைப்புகளுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. மேலும் அதனை உறுதிப்படுத்தும் செய்திகளும் இணையத்தில் கிடைக்கப் பெற்றன. 

    அந்த வகையில் பாதுகாப்பு அதிகாரி சிசிடிவி கேமராவை சேதப்படுத்திய சம்பவம் சமீபத்திய டிராக்டர் பேரணியில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×