search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி கூறியதாக வைரலாகும் தகவல்

    மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    தமிழக சுற்று பயணத்தின் போது ராகுல் காந்தி பேசியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ராகுல் காந்தி சீன எல்லையில் இந்திய ராணுவத்திற்கு மாற்றாக ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பேசினார் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    26 நொடிகள் ஓடும் வீடியோவில் ராகுல் காந்தி, `நீங்கள் இந்திய ராணுவம், கடற்படை, வான்படை கொண்டு சீனாவிடம் இருந்து இந்தியாவை பாதுகாக்கின்றனர். இந்திய பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்தினால் சீனா இந்தியாவினுள் ஊடுறுவ மாட்டார்கள்' என கூறுகிறார்.

    இந்திய ராணுவத்திற்கு மாற்றாக விவசாயிகள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்த முடியும் என ராகுல் காந்தி நினைக்கிறார். இதனால் நரேந்திர மோடி ஜி மற்றும் அமித் ஷா ஜி தயவு கூர்ந்து ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ள விஐபி பாதுகாப்பை நீக்கிவிட்டு இந்திய விவசாயிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்புக்கு நியமிக்க கேட்டுக் கொள்கிறோம் எனும் தலைப்பில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

     ராகுல் காந்தி

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அது ராகுல் காந்தி பேசியதில் இருந்து குறிப்பிட்ட பகுதி மட்டும் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. உண்மையில் ராகுல் காந்தி பாஜக-வின் பொருளாதார கொள்கைள் மீது குற்றச்சாட்டு தெரிவித்து பேசினார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதால் சீனா இந்தியாவினுள் ஊடுறவ முயற்சிக்கிறது என அவர் தெரிவித்தார்.

    ராகுல் காந்தி உரையின் முழு வீடியோ யூடியூபில் ஜனவரி 24 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோ, ஈரோடு மாவட்டத்தின் நெசவாளர் சமூகத்துடன் உரையாடல் எனும் தலைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் ராகுல் காந்தி உரையின் சிறு பகுதி மட்டும் தவறான தகவலுடன் பகிரப்பட்டு வந்தது உறுதியாவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×