search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே
    X
    மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை - முதல்மந்திரி உத்தவ் பேச்சு

    மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை என அம்மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. ஆரம்பத்தில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவிவந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    அம்மாநிலத்தில் நேற்று 3 ஆயிரத்து 940 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 92 ஆயிரத்து 707 ஆக உள்ளது.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 61 ஆயிரத்து 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து 17 லட்சத்து 81 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் மகாராஷ்டிராவில் இதுவரை 48 ஆயிரத்து 648 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்பட்டுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் இனி மற்றொரு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய தேவையில்லை என மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பொது இடங்களுக்கு செல்லும்போது அடுத்த 6 மாதங்களுக்கு பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும். வரும் முன் காப்பதே சிறந்தது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.

    மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கோ அல்லது மற்றொரு முழு ஊரடங்கோ அமல்படுத்த வேண்டும் என சிலர் எனக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால், மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கோ அல்லது மற்றொரு முழு ஊரடங்கோ அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை.

    என்றார். 
    Next Story
    ×