search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்திரி சுதாகர்
    X
    மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் வரும் நாட்களில் கொரோனா பரவல் தீவிரம் அடையும்: மந்திரி சுதாகர்

    கர்நாடகத்தில் வரும் நாட்களில் கொரோனா பரவல் தீவிரம் அடையும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக யாதகிரி மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசும்போது கூறியதாவது:-

    யாதகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் காரணமாக வைரஸ் பரவல் குறைந்துள்ளது. காய்ச்சல் உள்ளவர்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் இங்கு கொரோனா அதிகளவில் பரவியது. கிராமப்புற மக்களிடையே மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை நன்றாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் மற்றும் 2-வது நிலை தொடர்பாளர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யாதகிரியில் புதிதாக ரூ.435 கோடி செலவில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் பணிகள் மிக விரைவில் தொடங்க உள்ளது. மாநிலத்தில் தற்போது வைரஸ் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் வரும் நாட்களில் கொரோனா பரவல் தீவிரம் அடையும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு அவற்றை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மந்திரி சுதாகர் பேசினார்.
    Next Story
    ×