search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவில் (கோப்பு படம்)
    X
    சபரிமலை கோவில் (கோப்பு படம்)

    சபரிமலை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் - முதல்மந்திரி விஜயன் தகவல்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியது முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச் மாதம் முதல் அமலில் உள்ள ஊரடங்கால் வழிபாட்டு தளங்கள், பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.  போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டது.  

    இதன்பின்னர் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளபோதும் பொதுமக்களின் நலன், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தி கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்று முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 

    இதற்கிடையில், மத்திய அரசு வெளியிட்ட ஊரடங்கு தளர்வுகளில் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என அனுமதி வழங்கியிருந்தது.

    மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, கேரள மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கும் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இந்நிலையில், சபரிமலை கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், கோவிலில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் இன்று வெளியிட்டார்.

    இது தொடர்பாக விஜயன் கூறியதாவது:-

    நாளை திறக்கப்பட உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வேண்டும். ஒரு நாளைக்கு 250 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல்நிலை மலையேற தகுதியுடன் தான் உள்ளது என உடல்நல தகுதிச்சான்றிதழும் கட்டாயம் வேண்டும். 

    என தெரிவித்தார். 
    Next Story
    ×