search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முலாயம் சிங் யாதவ்
    X
    முலாயம் சிங் யாதவ்

    சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு கொரோனா

    சமாஜ்வாதி கட்சி தலைவரான முலாயம் சிங் யாதவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    லக்னோ:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு பொதுமக்கள் முதல் அரசியல் கட்சித்தலைவர்கள், மத்திய மந்திரிகள், மாநில முதல்மந்திரிகள் என அனைத்து தரப்பினரும் இலக்காகி வருகின்றனர்.

    அந்த வகையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத்தலைவருமான முலாயம் சிங் யாதவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 80 வயது நிரம்பிய முலாயம் சிங்கிற்கு அறிகுறிகள் எதுவும் இன்றி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வைரஸ் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, முலாயம் சிங் யாதவ் குருக்ரான் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக, சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ’சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முயாயம் சிங் யாதவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போதுவரை வைரஸ் தொடர்பான அறிகுறிகள் எதுவும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், சமாஜ்வாதி கட்சியின் தற்போதைய தலைவரும், முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

    ‘முலாயம் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டபின்னர் அவர் குருக்ரான் நகரில் உள்ள மிடண்டா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் மூத்த மருத்துவர்களை தொடர்பில் உள்ளோம். முலாயம் சிங் உடல்நிலை தொடர்பான தகவல்களை தொடர்ந்து அளிக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×