search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முக கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் - கர்நாடக அரசு உத்தரவு

    கர்நாடகத்தில் முக கவசத்தை அணியாவிட்டால் மாநகராட்சிகளில் ரூ.1,000- மும், பிற பகுதிகளில் ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் 6 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலி 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இதற்கிடையே நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தநிை-லையில் கர்நாடத்தில் 5-வது கட்ட தளர்வுக்கான புதிய வழிகாட்டுதலை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

    கர்நாடகத்தில் முக கவசத்தை அணியாவிட்டால் மாநகராட்சிகளில் ரூ.1,000- மும், பிற பகுதிகளில் ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். முக கவசம் மூக்கு வரை முழுமையாக மூடியிருக்க வேண்டும். தனிநபர்கள் 6 அடி வரை சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வணிக நிறுவனங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடகத்தில் முன்பு முககவசம் அணியாதவர்களுக்கு நகரப் பகுதியில் ரூ.200-ம், கிராமப்புறங்களில் ரூ.100-ம் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அபராத தொகை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×