search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிகே சிவக்குமார்
    X
    டிகே சிவக்குமார்

    சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலர் விண்ணப்பம்: டி.கே.சிவக்குமார்

    சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் பலர் விண்ணப்பித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    வேட்பாளர்களின் பெயர்கள்

    கர்நாடகத்தில் இடைத்தேர்தல் ஆகட்டும், தேர்தல் ஆகட்டும் அனைத்து கட்சிகளுக்கும் முக்கியமானது. சிரா, ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிகளின் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு நிர்வாகிகள் பலர் விண்ணப்பித்து உள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து கட்சி மேலிட தலைவர்களின் ஒப்புதலுடன் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும். ஜனதா தளம்(எஸ்) ஒரு கட்சி. அவர்களது வழியில் அவர்கள் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்.

    பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து எங்கள் கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் கொள்ளையடித்து உள்ளனர் என்று நாங்கள் கூறவில்லை. மந்திரிகளே கொள்ளையடித்து உள்ளனர்.

    கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளது என்று நாங்கள் சட்டசபை கூட்டத்தில் விவரமாக எடுத்து கூறியுள்ளோம். உடல் கவச உடை முதல் உணவு பொட்டலங்கள் வழங்கியது வரை அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது. இந்த முறைகேடு அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
    Next Story
    ×