search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் 668 சிறை கைதிகளுக்கு கொரோனா

    கர்நாடகத்தில் 668 சிறை கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக ஐகோர்ட்டில், மாநில அரசு கூறியுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டு செல்கிறது. மாநிலத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி சென்று விட்டது. உயிர்ப்பலியும் 8,500-ஐ தாண்டிவிட்டது. சாமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரையும், அரசியல்வாதிகளையும், சினிமா பிரபலங்களையும் கொரோனா தாக்கி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில், மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-

    கர்நாடகத்தில் 47 சிறைகள் உள்ளன. அந்த சிறைகளில் 14 ஆயிரத்து 677 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 668 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் 585 கைதிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். 103 பேர் சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு சிறையில் மட்டும் 320 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
    Next Story
    ×