search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம்
    X
    காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம்

    என்டிஏ என்றால் ’எந்த தரவுகளும் இல்லை’ என்று பொருள் - ஆளும் மத்திய பாஜக அரசை வெளுத்து வாங்கிய சசிதரூர்

    என்டிஏ (NDA - தேசிய ஜனநாயக கூட்டணி) என்றால் ’எந்த தரவுகளும் இல்லை’ என்று பொருள் என ஆளும் மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாஜக தலைமையிலான என்டிஏ (NDA) எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

    இந்த கேள்விகளுக்கு அரசு தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில கேள்விகளுக்கு தங்களிடம் பதிலளிக்க தரவுகள் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    குறிப்பாக, ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிளாலர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?, கொரோனா காலத்தில் நாடு முழுவதும் எத்தனை பேர் வேலையிழந்துள்ளனர்?, ஊரடங்கு காலத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்?, கொரோனாவால் பாதிக்கப்பட்டு எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்? போன்ற மிகவும் முக்கியமான கேள்விகளை பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை நோக்கி எழுப்பின. 

    ஆனால், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தங்களிடம் எந்த வித தரவுகளும் (தகவல்களும்) இல்லை என மத்திய அரசு தெரிவித்து விட்டது.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த பதிலுக்கு காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவரான சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 



    இது குறித்து சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’ புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மரணங்கள் குறித்த தரவுகள் இல்லை, விவசாயிகள் மரணம் குறித்த தரவுகள் இல்லை, நிதி தொடர்பாக தவறான தகவல்கள், கொரோனாவால் மரணமடைந்தவர்கள் தொடர்பாக சந்தேகத்திற்குரிய தரவுகள், ஜிடிபி வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) தொடர்பாக மேகமூட்டமான தரவுகள்... என்டிஏ என்பதற்கு
    தரவுகள் எதுவும் இல்லை (No Data Available, நோ டேட்டா அவெய்லபிள்) என்ற புதிய விளக்கத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அளித்துள்ளது’ என பதிவிட்ட்டுள்ளார்.

    Next Story
    ×