search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து
    X
    கொரோனாவைரஸ் தடுப்பு மருந்து

    பத்து லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ரஷ்யா அந்த நாட்டுக்கு பரிசளித்ததாக வைரலாகும் தகவல்

    ரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் கொரோனாவைரஸ் தடுப்பூசியில் பத்து லட்சம் யூனிட்கள் பாகிஸ்தானுக்கு பரிசளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.


    வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் வலம் வரும் தகவலில் ரஷியா சுமார் பத்து லட்சம் கொரோனாவைரஸ் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு பரிசாக வழங்கி உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை உலக சுகாதார மையம் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை என குறிப்பிட்டு இருப்பதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    'சீனாவை தொடர்ந்து ரஷியா பத்து லட்சம் கொரோனாவைரஸ் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு வழங்கி உள்ளது. உலக சுகாதா மையம் இதனை மூன்றாம் கட்ட சோதனை என குறிப்பிடுகிறது' எனும் தலைப்பில் வைரல் தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் தகவல்களை ஆய்வு செய்ததில், ரஷியா தனது தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவில்லை. மேலும் ரஷிய தடுப்பூசி பற்றி உலக சுகாதார மையம் வெளியிட்டதாக கூறும் தகவலிலும் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் சீனா கண்டறிந்த கொரோனாவைரஸ் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி அளித்து இருக்கிறது.

    தற்போதைய தகவல்களின் படி ரஷியா கண்டறிந்து இருக்கும் கொரோனாவைரஸ் தடுப்பூசியின் உற்பத்தி செப்டம்பர் மாத வாக்கில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று ரஷியா தனது கொரோனாவைரஸ் தடுப்பூசியை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×