search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார் ஜனாதிபதி

    ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடினர்.
    புதுடெல்லி:

    ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய பயிற்சி நர்சுகள் சங்கம், ராணுவ நர்சிங் பிரிவு, ஜனாதிபதி தோட்ட ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த நர்சுகள் கலந்து கொண்டனர்.

    ரக்‌ஷா பந்தன்


    அவர்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடினர்.

    நர்சுகளுடனான கலந்துரையாடலின்போது, அவர்கள் ஜனாதிபதி கையில் ராக்கி கயிறு கட்டி, வாழ்த்து தெரிவித்தனர். கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை பணியில் தங்களது அனுபவங்களை நர்சுகள் ஒவ்வொருவரும் எடுத்துரைத்தனர்.

    அதை பொறுமையாக கேட்ட ஜனாதிபதி, அவர்களது சேவையை பாராட்டினார். நர்சுகளை ‘மீட்பர்’ என்று வர்ணித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், “தங்கள் உயிரை பொருட்படுத்தாமல், மக்கள் உயிரை காப்பாற்றி வரும் ஒட்டுமொத்த நர்ஸ் சமுதாயத்தையும் வாழ்த்துகிறேன். இந்த கடமை உணர்வுதான் அவர்களுக்கு மரியாதை பெற்றுத் தருகிறது”’ என்றார்.
    Next Story
    ×