search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரக்‌ஷா பந்தன்"

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஓட்டல் மேனேஜ் மென்ட் துறை பேராசிரியர் செந்தில் செய்திருந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் ரக்ஷா பந்தன் விழா கல் லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் அவர் பேசுகை யில், சகோதர, சகோதரிக்கு இடையேயான உறவு பந் தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத் தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ரக்ஷாபந்தன் விழா.

    இப்பண்டிகையை, 'ராக்கி' என்றும் அழைப்பர் எனவும், இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட் டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர் என்றும் ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், 'பாது காப்பு பந்தம்' என்றும் பொருள் எனவும் பேசினார்.

    இதையடுத்து திருமங்கலம் பிரம்ம குமாரிகள் அமைப் பச் சேர்ந்த புனிதா, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிருக்கு ராக்கி கயிறு கட்டினார். அப்போது அவர் பேசுகையில், தீய விஷயங்கள் மற்றும் தீவி னைகளில் இருந்து சகோ தரர்களைக் காப்பாற்ற வும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயு ளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் இந்தப் பண்டிகை கொண்டாடப்ப டுகிறது எனவும் கூறினார்.

    பின்பு, நிர்வாக மேலாண் மைத்துறை இயக்குனர் டாக்டர். நடேசபாண்டியன், மேலாண்மை துறை பேரா சிரியர் டாக்டர் நாசர் மற்றும் பேராசிரியர்கள் தங்கபாண்டியன், திருப்பதி, சிங்கராஜா, ராமுத்தாய், கார்த்திகா, மணிமேகலை, ஜோதி, ஆறுமுக ஜோதி, முதல்வர் அலுவலக ஊழி யர் பிரியங்கா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோருக்கு ராக்கி கயிறு அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட் டினை ஓட்டல் மேனேஜ் மென்ட் துறை பேராசிரியர் செந்தில் செய்திருந்தார்.

    • டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்க்க, QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டு
    • கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் காத்திருப்பு ரெயில்களும் சேவையில் சேர்க்கப்படும்

    ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக டெல்லி மெட்ரோ ரெயில் இன்று கூடுதலாக 106 முறை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில், பயணிகளின் கூடுதல் நெரிசலைப் பூர்த்தி செய்ய கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) பணியாளர்களும் நிலையங்களில் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேவைப்பட்டால், கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் காத்திருப்பு ரெயில்களும் சேவையில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டிக்கெட் கவுன்டர்களில் நெரிசலைத் தவிர்க்க, QR குறியீடு அடிப்படையிலான டிக்கெட்டுகளை வாங்க, டிஎம்ஆர்சி டிராவல் மொபைல் செயலியைப் பயன்படுத்துமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    பயணிகளுக்கு உதவவும் வழிகாட்டவும் முக்கிய மெட்ரோ நிலையங்களில் காவலர்கள் மற்றும் வாடிக்கையாளர் வசதி முகவர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இதுவே என் விருப்பம் என பதிவிட்டுள்ளார்.

    • ராஜஸ்தான் மாநிலத்தில் ரக‌்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் மாத இறுதியில் கொண்டாடப்பட இருக்கிறது.
    • இந்த பெண்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு இலவச இண்டர்நெட் வழங்கப்படும்.

    ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுக்க சுமார் 40 லட்சம் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு இண்டர்நெட் பேக் வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் மாத இறுதியில் கொண்டாடப்பட இருக்கிறது.

    "சிரஞ்சீவி திட்டத்தின் கீழ், நாங்கள் அனைத்து மகளிரையும் குடும்ப தலைவிகளாக்கி இருக்கிறோம். 1 கோடியே 35 லட்சம் பெண்கள் அவர்களது வீட்டின் குடும்ப தலைவிகள் ஆகியுள்ளனர். இந்த பெண்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு இலவச இண்டர்நெட் வழங்கப்படும்."

    "ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது, 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை ராஜஸ்தானில் உள்ள பெண்களுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறோம்," என்று அனுமன்கர் மாவட்டத்தை அடுத்த ராவட்சர் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் நிவாரண முகாமில் தங்கியிருந்த மக்களிடையே பேசும் போது மாநில முதல்வர் கெலாட் தெரிவித்தார்.

     

    முன்னதாக 2022 பட்ஜெட் அறிவிப்பின் போது மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் இலவச ஸ்மார்ட்போன் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

    அதன்படி முக்கியமந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் 1 கோடியே 35 லட்சம் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட இருக்கிறது. எனினும், ஒரே சமயத்தில் இத்தனை ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாது என்பதால், இந்த திட்டத்தை ஒரே சமயத்தில் முழுமையாக அமல்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

    இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி மொத்தத்தில் 1 கோடியே 37 லட்சத்து 82 ஆயிரத்து 951 குடும்பங்கள் சிரஞ்சீவி காப்பீடு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வரை ஒரு ஆண்டு முழுவதுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. 

    • மாணவ-மாணவிகளிடையே சகோதரத்துவ உணர்வை மேம்படுத்துவதற்காக ரக்‌ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவிகள் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அக்‌ஷ்யா அகாடமி சி.பி.எஸ்.இ மெட்ரிக் மாணவ-மாணவிகளிடையே சகோதரத்துவ உணர்வை மேம்படுத்துவதற்காக ரக்‌ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளி மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவிகளுக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மாணவிகள் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

    மாணவர்கள் தங்களுக்கு ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள் . விழாவில் பள்ளியின் சேர்மன் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், முதல்வர் இன்னாசிமுத்து, நிர்வாக மேலாண்மையாளர்கள் செல்வி, சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • உடன்பிறந்த சகோதரர்களை ராக்கி என்னும் கயிறு கட்டி ரக்‌சா பந்தன் கொண்டாடி வருகின்றனர்.
    • தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும் தற்போது அனைவரும் கொண்டாடஆரம்பித்துவிட்டனர்.

    பல்லடம் :

    வட இந்தியாவில் தங்கைகள், அக்காக்கள் அனைவரும் தங்களது உடன்பிறந்த சகோதரர்களை ராக்கி என்னும் கயிறு கட்டி ரக்‌சா பந்தன் கொண்டாடி வருகின்றனர்.இது தமிழகத்தில் கொண்டாடப்பட்ட நிகழ்வு இல்லை என்றாலும் தற்போது அனைவரும் கொண்டாடஆரம்பித்துவிட்டனர்.

    அந்தவகையில் பல்லடம் 18-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் சசிரேகா ரமேஷ், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், நகராட்சி ஆணையாளர் விநாயகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட முக்கியபிரமுகர்களுக்கு ராக்கி கட்டி ரக்‌சா பந்தன் விழாவை கொண்டாடினார்.

    • கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பி வருகிறார்கள்
    • ராக்கி கயிறுகளில் படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்களே பொறித்தனர்.

    கரூர் :

    ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களுக்கு 1.5 லட்சம் ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனுப்பினர்.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை கரூர் பரணிபார்க் பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பி வருகிறார்கள்.

    நிகழாண்டு நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூறும் வகையிலும், பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, முப்படை களின் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் பதவியேற்ற திரெளபதி முர்முவை கௌரவப்படுத் தும் வகையிலும் இப்பள்ளியில் 1.5 லட்சம் ராக்கி கயிறுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

    இதில், 75,000 ராக்கி கயிறுகளில் படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியர்களே பொறித்தனர். மீத முள்ள 75,000 ராக்கி கயிறுகளை மாணவ, மாணவிகள் தயாரித்தனர். இந்தப் பணி திங்கள்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன் முன்னிலை பள்ளித் தாளாளர் எஸ்.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி ஆகி யோர் தலைமையில் ரயில் மூலம் புதுதில்லிக்கு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து பள்ளி முதன்மை முதல்வர் சொ.ராமசுப்ரமணியன் கூறுகையில்,நிகழாண்டு சற்று வித்தியாசமாக திருக்குறளை 18 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து, ஒவ்வொரு ராக்கியிலும் ஒருமொழியில் திருக்குறளை ஆசிரியர்களாகிய நாங்களே பதித்துள் ளோம்.

    இந்த ராக்கி கயிறுகள் முன்னாள் எம்.பி. தருண் விஜய்யிடம்வழங்கப்பட்டு, அவர் ஆகஸ்ட் 11ஆம்தேதி நடைபெறும் ரக்‌ஷா பந்தன் விழாவில் ராணுவ அதிகா ரிகளிடம் வழங்குவார். அவர்கள் மூலம் 18 மொழிகள் கொண்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாட்டை பாதுகாத்துக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களின் கைகளில் அணிவிக்கப்பட உள்ளது என்றார்.

    • ரக்‌ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.
    • மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

    ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    வரும் ஆகஸ்டு 11-ம் தேதி அன்று ராக்கி என்றும் அழைக்கப்படும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை, சகோதர-சகோதரி பந்தத்தை கொண்டாடுகிறது.

    ராஜஸ்தான் சாலை மார்க்கத்தில் பேருந்துகளில், ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர, மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தார். #HappyRakshaBandhan #RakshaBandhan
    புதுடெல்லி:

    சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பண்டிகை வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டுவர், அதற்கு பதிலாக ஆண்கள் தங்களது சகோதரிகளுக்கு பரிசுகள் கொடுக்க வேண்டும். இன்று ரக்‌ஷா பந்தன் பண்டியை வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.



    டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பெண்கள் மற்றும் சிறுமிகள் ராக்கி கட்டினர். அதேபோல, பிரதமர் மோடிக்கும் சிறுமிகள், பெண்கள் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் ராக்கி கட்டி வாழ்த்து கூறினார்.



    ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு குஜராத் மாநிலம் சூரத்தில் 24 காரட் தங்க இழைகளால் மூடப்பட்ட ஸ்வீட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. #RakshaBandhan
    அகமதாபாத்:

    சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டினை வடமாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள இனிப்பு கடை ஒன்று வித்தியாசமான அதே வேளையில் பிரம்மாண்டமாக ஒரு ஸ்வீட்டை தயார் செய்துள்ளது. 

    பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் 24 காரட் தங்க இழைகளால் மூடப்பட்டுள்ள இந்த ஸ்வீட் ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ‘வழக்கமாக பயன்படுத்தும் சில்வர் இழைகளுக்கு பதிலாக தங்க இழைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்வீட்டை விரும்பி வாங்கிச்செல்கின்றனர்’ என கூறியுள்ளார் கடை உரிமையாளர். 
    ×